TNPSC Thervupettagam

உலக வாயு எரிப்பு கண்காணிப்பு அறிக்கை 2023

July 3 , 2024 143 days 250 0
  • உலக வங்கியின் சமீபத்திய உலக வாயு எரிப்பு கண்காணிப்பு அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நைஜீரியா முதல் ஒன்பது வாயு எரிப்பு நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 139 bcm ஆக இருந்த உலகளாவிய வாயு எரிப்பு அளவு ஆனது 2023 ஆம் ஆண்டில் 7% அதிகரித்து 148 bcm ஆக உயர்ந்துள்ளது.
  • எண்ணெய் உற்பத்தியானது ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்ததால், உலகளாவிய சராசரி வாயு எரிப்புகளின் செறிவு அதிகரித்தது.
  • வாயு எரிப்பு ஆனது மொத்தமாக 9 bcm அதிகரிப்பதால் கூடுதலாக 23 மில்லியன் டன்கள் CO2e வெளியேற்றம் பதிவானது.
  • வாயு எரிப்பு செய்யும் முதல் ஒன்பது நாடுகள் அனைத்து வாயு எரிப்புகளில் 75% பங்கைக் கொண்டுள்ளன ஆனால் அவை உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 46% பங்கினை மட்டுமே கொண்டுள்ளன.
  • 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் மீதமுள்ள 25 சதவீத உலகளாவிய வாயு எரிப்பு அளவுகள் பதிவாகியுள்ளன.
  • உலகின் எரிம வாயுவில் 75% ஆனது நைஜீரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், அமெரிக்கா, வெனிசுலா, அல்ஜீரியா மற்றும் லிபியாவில் இருந்து பெறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்