ஒடிசாவின் வாழக்கூடிய வாழ்விடத் திட்டம் (OLHM - Odisha Liveable Habitat Mission) என்று அழைக்கப்படும் “ஜகா” என்ற திட்டத்திற்காக ‘உலக வாழ்விட விருதை’ ஒடிசா மாநிலம் வென்றுள்ளது.
இது சேரிகளில் வாழும் மில்லியன் கணக்கான நகர்ப்புற ஏழை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட ஒரு சேரி நில உரிமைத் திட்டமாகும்.
இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள புதுமையான வீட்டுவசதித் திட்டங்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் இங்கிலாந்தில் (ஐக்கிய ராஜ்ஜியம்) உள்ள “வேர்ல்ட் ஹபிடட்” என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்றது.