TNPSC Thervupettagam

உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 04/10

October 8 , 2024 46 days 76 0
  • இது விண்வெளி ஆய்வின் பல நன்மைகளை முன்னிலைப்படுத்துவதோடு விண்வெளி நடவடிக்கைகளில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
  • இது பின்வரும் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்களை நினைவு கூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டது:
    • 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் ஏவப்பட்ட நிகழ்வு மற்றும்
    • 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • அக்டோபர் 04 ஆம் தேதியன்று சோவியத் ஒன்றியத்தினால் ஸ்புட்னிக் 1 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது என்பதோடு இதுவே சுற்றுப்பாதையில் மனிதகுலம் உருவாக்கிய முதல் செயற்கையான செயற்கைக் கோள் நிலை நிறுத்தப் பட்டதைக் குறித்தது.
  • விண்வெளி ஒப்பந்தம் ஆனது சர்வதேச விண்வெளி சட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவதோடு, விண்வெளியில் அமைதியான பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Space and Climate Change” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்