TNPSC Thervupettagam

உலக விண்வெளி வாரம் - அக்டோபர் 04/10

October 7 , 2023 417 days 216 0
  • விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை நன்குச் சிறப்பிக்கும் வகையில் இந்த வார அளவிலான கொண்டாட்டம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று, மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் புவி செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 விண்ணில் ஏவப்பட்டது.
  • 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று, நிலவு மற்றும் பிற வானியல் அமைப்புகளை உள்ளடக்கிய விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்தச் செய்வதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இது "விண்வெளியின் மகா சாசனம்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டு உலக விண்வெளி வாரத்தின் கருத்துரு, "விண்வெளி மற்றும் தொழில் முனைவு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்