TNPSC Thervupettagam

உலக விண்வெளி வாரம்: அக்டோபர் 04-10

October 8 , 2019 1818 days 885 0
  • உலக விண்வெளி வாரம் ஐரோப்பா மற்றும் ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர ஆண்டு விடுமுறையாக அனுசரிக்கப் படுகிறது.
  • 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி  அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக விண்வெளி வாரத்தை ஒரு வருடாந்திர ஆண்டு நிகழ்வுக்  கொண்டாட்டமாக அறிவித்தது.
  • இந்த தேதிகளின் தேர்வு, விண்வெளி வரலாற்றில் பின்வரும் இரண்டு முக்கியமான தேதிகளை அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்தது.
    • 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதியன்று, மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பூமி செயற்கைக் கோளான ஸ்பூட்னிக் 1ஐ ஏவியது; மற்றும்
    • 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதியன்று வெளி விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தினம்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருப் பொருள் “நிலவு: நட்சத்திரங்களுக்கான நுழைவாயில்” என்பதாகும்.
  • இது 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியன்று சந்திரனில் மனித குலத்தின் முதல் காலடி பதிந்ததின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்