உலக விண்வெளி வாரம் (WSW - World Space Week) - அக்டோபர் 4 - 10
October 8 , 2018 2240 days 957 0
உலக விண்வெளி வாரமானது உலகின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 4 முதல் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.
2018ம் ஆண்டின் கருத்துருவானது “விண்வெளி உலகத்தை ஐக்கியப்படுத்துகிறது” ( Space Unites the World) என்பதாகும்.
உலக விண்வெளி வாரமானது அதிகாரப் பூர்வமாக “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டம் மற்றும் மனித குலத்தின் நலனுக்காக அவற்றின் பங்களிப்பு” (an international celebration of science and technology, and their contribution to the betterment of the human condition) என்று விவரிக்கப்படுகிறது.
டிசம்பர் 6, 1999 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது உலக விண்வெளி வாரத்தை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நிகழ்வாக அறிவித்தது.
இந்தத் தேதிகளின் தேர்வானது விண்வெளி வரலாற்றில் கீழ்க்காணும் குறிப்பிடத்தக்க தேதிகளின் அங்கீகாரம் ஆகும்.
அக்டோபர் 4, 1957 - பூமியின் முதலாவது செயற்கைக்கோள் (மனிதனால் தயாரிக்கப்பட்ட) ஸ்புட்னிக் 1 ஏவப்பட்ட நாள்.
அக்டோபர் 10, 1967 – வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம் கையெழுத்தான நாள்.