உலகம் முழுவதும் விலங்குகளின் மதிப்பை உயர்த்துவதன் மூலம் விலங்குகளின் நலம் சார்ந்த தரங்களை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலக விலங்குகள் தினம் (WAD - World Animal Day) அனுசரிக்கப்படுகிறது.
இத்தினம் ஹென்ரிச் ஜிம்மர்மன் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் ஜெர்மனியின் பெர்லினில் உள்ள விளையாட்டு அரங்கில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று முதலாவது உலக விலங்குகள் தினத்தை நடத்தினார்.
இந்த தினமானது 1929 ஆம் ஆண்டு முதன்முறையாக அக்டோபர் 4க்கு மாற்றப்பட்டது.
அக்டோபர் 4 ஆம் தேதியானது விலங்குகள் நல ஆர்வலரான அசிசி பிரான்சிஸின் விருந்து தினத்தைக் குறிக்கிறது.
இத்தினம் 2003 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய இராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட விலங்குகள் நல அறக்கட்டளையான ‘நேச்சர்வாட்ச் பவுண்டேஷன்’ (Naturewatch Foundation) என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது.