TNPSC Thervupettagam

உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜூலை 06

July 7 , 2020 1543 days 514 0
  • இத்தினமானது விலங்கு வழி நோய்களுக்கு எதிராக முதலாவது தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்ட அறிவியல் சாதனையை நினைவு கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • 1885 ஆம் ஆண்டு ஜூலை 06 அன்று லூயிஸ் பாஸ்டர் என்பவர் ஒரு விலங்கு வழி நோயான ரேபிஸ் வைரசிற்கு எதிரான முதலாவது தடுப்பூசியை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தார்.
  • இவர் அதன் மூலம் பரவலான காய்ச்சலால் ஏற்படும் இறப்பைக் குறைத்தார். மேலும் இவர் ரேபிஸ் (வெறிநாய்க்கடி நோய்) மற்றும் ஆந்த்ராக்ஸ் ஆகியவற்றிற்கான முதலாவது தடுப்பூசி மருந்துகளையும் உருவாக்கினார்.
  • இவர் பாக்டீரியக் கலப்படத்தைத் தடுப்பதற்காக வேண்டி பால் மற்றும் மதுவைக் கலக்கும் முறையைக் கண்டுபிடித்தற்காக பொது மக்களிடையே பெரிதும் அறியப் படுகின்றார். இந்தச் செயல்முறை சூடாக்கிப் பதப்படுத்துதல் என்று அழைக்கப் படுகின்றது.
  • விலங்கு வழி நோய் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவுகின்ற பாக்டீரியா (நுண்ணுயிரி), வைரஸ் (தீநுண்மி) மற்றும் ஒட்டுண்ணி ஆகியவற்றால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.
  • விலங்கு வழி நோய்கள் ஆனது விலங்குகளின் நேரடித் தொடர்பினாலோ, நோய்க் கடத்திகளின் மூலமோ அல்லது உணவின் மூலமோ பரவுகின்றன.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்