உலக வெப்பமயமாதலுக்கான பங்களிப்பில் முன்னணியில் உள்ள 10 நாடுகள்
April 4 , 2023 601 days 316 0
உலக வெப்பமயமாதலுக்கானப் பங்களிப்பில் முன்னணியில் உள்ள 10 நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
1850 ஆம் ஆண்டு முதல் பதிவான முக்கியப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் காரணமாக அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தோனேசியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் அடுத்த 5 இடங்களில் உள்ளன.
1850 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 0.08 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு இந்தியாவே காரணமாக உள்ளது.
கார்பன் டை ஆக்சைடு (CO2), மீத்தேன் (CH4) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) ஆகிய மூன்று பசுமை இல்ல வாயுக்களின் (GHG) உமிழ்வின் விளைவாக புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது.
இந்த மூன்று வாயுக்களில், உலக நாடுகளின் கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வுகளே வெப்பமயமாதலுக்கு அதிகப் பங்கினைக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு வரை, உலகளாவிய CO2 உமிழ்வு மூலம் ஏற்பட்ட வெப்பமயமாதல் 1.11°C ஆகவும், CH4 உமிழ்வு மூலம் ஏற்பட்ட வெப்பமயமாதல் 0.41°C ஆகவும், N2O உமிழ்வு மூலம் ஏற்பட்ட வெப்பமயமாதல் 0.08°C ஆகவும் இருந்தது.
1992 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெப்பமயமாதலுக்கான ஒருங்கிணைந்தப் பங்களிப்பு என்பது 2021 ஆம் ஆண்டில் 23% ஆக உயர்ந்தது.