TNPSC Thervupettagam

உலக வெறிநாய்க்கடி நோய் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2022 695 days 263 0
  • இது வெறிநாய்க்கடி நோய்க்கான உலகின் முதலாவது திறன்மிக்க தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான போராட்டத்தை மேம்படுத்தவும், அதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த கொடிய நோய்க்கு எதிராக உலகம் மேற் கொண்ட சாதனைகளைக் கொண்டாடவும் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘வெறிநாய்க்கடி நோய்: ஒரு சுகாதாரம், சுழிய அளவு மரணம்' என்பதாகும்.
  • முதலாவது உலக வெறிநாய்க்கடி நோய் தினப் பிரச்சாரமானது 2007 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • வெறிநாய்க்கடி நோய் என்பது ஒரு ஆபத்தான ஆனால் தடுக்கக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும்.
  • இது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீரில் இருந்து மக்களுக்குப் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்