TNPSC Thervupettagam

உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்ட அறிக்கை 2025

January 20 , 2025 2 days 46 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO) ஜெனீவாவில் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்: போக்குகள் 2025 என்ற அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், உலகளாவிய வேலைவாய்ப்பு ஆனது தொழிலாளர் வளத்திற்கு ஏற்ப வளர்ச்சியடைந்ததாகவும், அது வேலைவாய்ப்பின்மை விகிதத்தினைச் சுமார் 5 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருந்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • இருப்பினும், இளையோர் வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 12.6% ஆக அதிகமாக இருந்ததால் சிறிதளவு முன்னேற்றமே பதிவாகியுள்ளது.
  • பொருளாதார வளர்ச்சியானது, 2024 ஆம் ஆண்டில் 3.2% ஆக இருந்தது, இது 2023 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் முறையே 3.3 மற்றும் 3.6% ஆக இருந்தது.
  • வேலை செய்ய விரும்பும் ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 402 மில்லியனை எட்டியது.
  • இதில் 186 மில்லியன் வேலைவாய்ப்பற்றோர், 137 மில்லியன் தற்காலிகமாக வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் வேலை தேடுவதை நிறுத்திய 79 மில்லியன் ஊக்கம் இழந்தத் தொழிலாளர்கள் அடங்குவர்.
  • கல்வி, வேலைவாய்ப்பு அல்லது அதன் பயிற்சியில் (NEET) இல்லாத இளையோர்களின் விகிதங்கள் அதிகரித்துள்ளன.
  • மிக குறைவான வருமானம் கொண்ட நாடுகளில், இளையோர்களின் NEET விகிதங்கள் பெருந்தொற்றிற்கு முந்தைய நிலைகளை விட 4 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளன.
  • இந்த ஒரு நிலையானது 2024 ஆம் ஆண்டில் 15.8 மில்லியன் இளைஞர்களையும் 28.2 மில்லியன் இளம் பெண்களையும் பாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்