TNPSC Thervupettagam

உலக ஹோமியோபதி தினம் - ஏப்ரல் 10

April 14 , 2018 2416 days 753 0
  • ஹோமியோபதி மருத்துவ முறையின் தந்தை மற்றும் நிறுவனரான டாக்டர்.கிறிஸ்டியன் பிரெயேட்ரிச் சாமூவேல் ஹாஹ்னெமன் ( Christian Friedrich Samuel Hahnemann) அவர்களை கவுரவிப்பதற்காகவும் மரியாதை செலுத்துவதற்காகவும்   ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் (World Homoeopathy Day-WHD) கொண்டாடப்படுகின்றது.
  • இவ்வருடம் ஹோமியோபதியின் தந்தையான டாக்டர்.கிறிஸ்டியன் பிரெயேட்ரிச் சாமூவேல் ஹாஹ்னெமன் அவர்களின்  263வது பிறந்த நாள் வருடமாகும்.
  • இந்த இருநாள் மாநாட்டின் கருத்துரு” 40 ஆண்டுகளிலிருந்து இதுவரை புத்தாக்கம், பரிணாமம், முன்னேற்றம், அறிவியல் ஆய்வு ( “Innovate: Evolve, Progress: Exploring Science since 40 years”)
  • இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 2018-ஆம் ஆண்டிற்கான உலக ஹோமியோபதி தினம் மீதான அறிவியல் மாநாட்டை புதுதில்லியில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்துள்ளார்.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் (Ministry of AYUSH)  இம்மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளது.
  • ஹோமியோபதி மருத்துவ முறையனது 1796 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில்  பிறந்த டாக்டர்.கிறிஸ்டியன் பிரெயேட்ரிச் சாமூவேல் ஹாஹ்னெமன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்