TNPSC Thervupettagam

உலைச் சாம்பலைப் பயன்படுத்தி நீர்புகா பொருள்

August 26 , 2019 1920 days 679 0
  • ஐதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் உலைச் சாம்பலைப் பூசுவதன் மூலம் மலிவான நீர் புகா பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • உலைச் சாம்பல் என்பது நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்களிலிருந்து ஸ்டீயாரிக் அமிலத்துடன் மேற்பரப்பில் வரும் துணைக் கழிவுப் பொருளாகும்.
  • உலைச் சாம்பலானது மிகவும் நீர் நாட்டமுடையது என்றாலும் ஸ்டீயாரிக் அமிலத்துடன் கலந்து பூசப்படும் போது அதிக நீர் விலக்கும் மேற்பரப்பாக அது மாறும்.
  • இது 100 நானோ மீட்டரிலிருந்து சில மைக்ரான் வரை அளவில் மாறுபடும். இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட துகள்களின் அளவின் அடிப்படையில் வெவ்வேறு கடினத் தன்மையுடைய மேற்பரப்புகளை இது வழங்குகிறது.
  • ஸ்டீயாரிக் அமிலம் பூசப்பட்ட உலைச் சாம்பல் பரப்பானது ரோஜா இதழ் அல்லது தாமரை இலைகளைப் போன்று செயல்பட வைக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்