அமெரிக்கா மற்றும் இதர 10 நாடுகள் இணைந்து, உளவு நிரலுக்கு எதிரான முதல் பிரகடனத்தினை வெளியிட்டுள்ளன.
வணிக ரீதியான உளவு நிரல்களை தவறாகப் பயன்படுத்தச் செய்வதால் ஏற்படும் அச்சுறுத்தலையும், அத்தகையத் தொழில்நுட்பத்தின் பெருக்கம் மற்றும் பயன்பாடு மீதான கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இவை அங்கீகரிக்கின்றன.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், அமெரிக்க மத்திய அரசானது உளவு நிரலினைப் பயன்படுத்தச் செய்வதனைத் தடை செய்வதற்கான ஒரு நிர்வாக ஆணையை வெளியிட்டார்.