இந்தியாவின் உளுந்து (உரட்) மற்றும் துவரை (துர்) இறக்குமதிக்கான ஒரு முக்கிய ஆதாரமாக மாறும் சாத்தியக் கூறினைப் பிரேசில் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் 4,102 டன்னாக இருந்த உளுந்து இறக்குமதியின் அளவு தற்போது அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் அக்டோபர் மாத இறுதி வரை இது 22,000 டன்னாக இருந்தது.
நடப்பு ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஆஸ்திரேலியாவின் கொண்டைக் கடலை உற்பத்தியானது சுமார் 13.3 லட்சம் டன்களாக மதிப்பிடப் பட்டு உள்ளது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டில் 4.9 லட்சம் டன்களாக இருந்தது.
உள்நாட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியா ஆண்டுதோறும் 3-4 மில்லியன் டன்கள் வரையிலான பல்வேறு வகையான பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வருகிறது.