TNPSC Thervupettagam

உள்கட்டமைப்புத் திட்டங்களை கண்காணிப்பதற்கான தமிழக அரசின் இணைய தளம்

October 26 , 2021 1131 days 858 0
  • தமிழகத்தின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையினால் உருவாக்கப்பட்ட இணைய தளங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • மேலும் இவை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தகவல் தொழில்நுட்பம்/தகவல் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் நிறுவனங்களும் மாநில அரசுடன் தொடர்பு கொள்ளவும் அதன்  கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்கவும் உதவுகிறது.
  • தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனமானது ‘இ – முன்னேற்றம்‘ என்ற ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.
  • இந்த வலைதளமானது ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் ஒப்பந்த தேதி, தொடக்க தேதி, செலவு மதிப்பீடு, மாதாந்திர அடிப்படையில் நிதி மற்றும் கட்டமைப்புப் பரிமாணங்களில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், இடத்தினைக் குறித்த தகவல் மற்றும் அந்த இடத்தின் புவிசார் தகவல் அமைப்பு நிலைகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியனவற்றைக் கொண்டிருக்கும்.
  • தமிழ்நாடு மின்னாளுகை நிறுவனமானது ‘IT நண்பன்என்ற ஒரு ஊடாடும்  தளத்தினையும் உருவாக்கியுள்ளது.
  • இது தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படுவதோடு தமிழகத்தின் அனைத்துத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மாநில அரசின் கொள்கை உருவாக்கத்தில் மாநில அரசுடன் தொடர்பு கொண்டு பங்காற்ற வழிவகை செய்கிறது.
  • தமிழ்நாடு மெய்நிகர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய இரண்டு தமிழ் கணினி மென்பொருட்களையும் திரு. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
  • கீழடிதமிழிணைய விசைப்பலகை ஆனது தமிழ் 99 விசைப்பலகை, ஒலியியல் விசைப் பலகை மற்றும் பழைய தட்டச்சு சார்ந்த விசைப்பலகை ஆகிய 3 வகை விசைப் பலகையுடன் செயல்படும்.
  • தமிழிதமிழிணைய ஒருங்குறி மாற்றி எனும் மென்பொருளானது உரை, கோப்பு மற்றும் கோப்புறை ஆகியவற்றை மாற்றி வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்