உள்துறை அமைச்சகமானது இணையதள குற்றங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய சாதாரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக சுட்டுரை (ட்விட்டர்) கணக்கான @cyberDost ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இணையவெளி குற்றங்கள் மற்றும் குற்ற தடுப்புகளுக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களின் அடிப்படை அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.