தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முதலுறு வேக ஈணுலையில் (PFBR) எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது.
முதலுறு வேக ஈணுலைகள் ஆனது, இந்தியாவின் மூன்று-நிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் உருவாக்கப் படுகின்றன.
PFBR என்பது அது பயன்படுத்துவதை விட அதிக அணுசக்தி எரிபொருளை உற்பத்தி செய்கின்ற ஓர் இயந்திரம் ஆகும்.
PFBR உலையின் செயல்பாடாக்கம் ஆனது, இந்தியாவின் மூன்று நிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
இந்தியாவானது முதன்முதலில் அழுத்தக் கனநீர் உலைகள் (PHWRs) மற்றும் இயற்கை யுரேனியம்-238 (U-238) ஆகியவற்றைப் பயன்படுத்தியது.
இது U-235 ஐசோடோப்புகளை சிறிய அளவுகளில் பிளவுப் பொருளாக கொண்டுள்ளது.
இந்த வினைகள், புளூட்டோனியம்-239 (Pu-239) மற்றும் ஆற்றலை உருவாக்குகின்றன.
இரண்டாம் கட்டத்தில், ஆற்றல், U-233 மற்றும் அதிக Pu-239 ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அழுத்தக் கனநீர் உலைகளில் U-238 என்பதுடன் சேர்த்து Pu-239 என்ற ஐசோடோப்புகளைப் பயன்படுத்தப்படுகின்றது.
இதன் மூன்றாம் கட்டத்தில், ஆற்றலையும் U-233 ஐசோடோப்பினையும் உற்பத்தி செய்வதற்காக உலைகளில் தோரியம்-232 (Th-232) ஐசோடோப்புடன் Pu-239 சேர்க்கப் படுகிறது.
இந்திய நாடானது உலகின் தோரிய இருப்பில் சுமார் கால் பங்கினைக் கொண்டு உள்ளதால், ஹோமி J. பாபா அவர்கள் மூன்று நிலை அணு உலைகளை வடிவமைத்தார்.