TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலுறு வேக ஈணுலை

March 7 , 2024 134 days 295 0
  • தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முதலுறு வேக ஈணுலையில் (PFBR) எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியது.
  • முதலுறு வேக ஈணுலைகள் ஆனது, இந்தியாவின் மூன்று-நிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் உருவாக்கப் படுகின்றன.
  • PFBR என்பது அது பயன்படுத்துவதை விட அதிக அணுசக்தி எரிபொருளை உற்பத்தி செய்கின்ற ஓர் இயந்திரம் ஆகும்.
  • PFBR உலையின் செயல்பாடாக்கம் ஆனது, இந்தியாவின் மூன்று நிலை அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
  • இந்தியாவானது முதன்முதலில் அழுத்தக் கனநீர் உலைகள் (PHWRs) மற்றும் இயற்கை யுரேனியம்-238 (U-238) ஆகியவற்றைப் பயன்படுத்தியது.
  • இது U-235 ஐசோடோப்புகளை சிறிய அளவுகளில் பிளவுப் பொருளாக கொண்டுள்ளது.
  • இந்த வினைகள், புளூட்டோனியம்-239 (Pu-239) மற்றும் ஆற்றலை உருவாக்குகின்றன.
  • இரண்டாம் கட்டத்தில், ஆற்றல், U-233 மற்றும் அதிக Pu-239 ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அழுத்தக் கனநீர் உலைகளில் U-238 என்பதுடன் சேர்த்து Pu-239 என்ற ஐசோடோப்புகளைப் பயன்படுத்தப்படுகின்றது.
  • இதன் மூன்றாம் கட்டத்தில், ஆற்றலையும் U-233 ஐசோடோப்பினையும் உற்பத்தி செய்வதற்காக உலைகளில் தோரியம்-232 (Th-232) ஐசோடோப்புடன் Pu-239 சேர்க்கப் படுகிறது.
  • இந்திய நாடானது உலகின் தோரிய இருப்பில் சுமார் கால் பங்கினைக் கொண்டு உள்ளதால், ஹோமி J. பாபா அவர்கள் மூன்று நிலை அணு உலைகளை வடிவமைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்