உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லேசர் முறையில் வழிகாட்டுகின்ற பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை
August 8 , 2022 844 days 437 0
பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லேசர் முறையில் வழிகாட்டுகின்ற பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்தன.
அர்ஜுன் எனப்படும் பிரதான போர் பீரங்கியில் இருந்து இந்த ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டன.
பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகள் துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் இலக்கைத் தாக்கி அவற்றை இரண்டு வெவ்வேறு தொலைவு வரம்புகளில் அழித்தன.
மேம்படுத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை பல தளங்களில் இருந்து ஏவக் கூடியத் திறனைக் கொண்டுள்ளது.