உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் உயர்தர தங்க மதிப்பிற்கான குறியீட்டு மதிப்பு
December 25 , 2017 2527 days 897 0
பாரதீய நிர்தேசக் திரவியா என்ற இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் உயர்தர தங்க மதிப்பிற்கான குறியீட்டு மதிப்பு மும்பையின் இந்திய அரசு அச்சகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
99 சதவீதம் சுத்தமானது எனப்படும் 9999 என்ற உலோகங்களுக்கான உயர்தர குறியீடு BND-4201 என்பது பொதுமக்களுக்கும் நுகர்வோருக்கும் தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இந்த உயர்தர மதிப்பீடு
இந்திய அரசு அச்சகம், பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்தில் உள்ள மூலப்பொருட்களின் இயைபு மற்றும் இயல்பாய்விற்கான தேசிய நிறுவனம், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் மற்றும் புதுதில்லியில் உள்ள தேசிய இயற்பியல் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவிற்கு அடுத்தபடியான உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்கத்திற்கான சந்தையாக இந்தியா உள்ள போதும், இந்தியாவில் உள்ள தங்க பொற்கொல்லர்கள் தங்க பிஸ்கட்கள், நாணயங்கள், மற்றும் நகைகள் ஆகியவற்றின் தூய்மையை உறுதிப்படுத்த இறக்குமதி செய்யப்பட்ட தங்க கட்டிகளையே சார்ந்திருந்தனர்.
BND 4201ன் உயர்தர தூய்மையான அளவீடு சர்வதேச முறை அலகுகள் உடன் ஒப்பிடக்கூடியது. ஆகவே இதனை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகம்.
BND 4201 மதிப்பு தங்க கட்டி இறக்குமதி செய்யப்படும் தங்கக் கட்டியைத் காட்டிலும் 25 சதவிகிதம் விலை குறைந்தவை ஆகும். இதனால் மற்ற அயல் நாடுகளை சார்ந்திருப்பது தவிர்க்கப்படும் மற்றும் அன்னிய செலாவணி சேமிப்பும் ஏற்படும்.
மும்பையின் இந்திய அரசு அச்சகம் என்பது இந்திய பத்திரங்கள் அச்சகம் மற்றும் நாணயங்கள் அச்சடிப்பு நிறுவனத்தின் ஒரு பிரிவாகும்.