TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு செயற்கைக்கோள்களுக்கான அணு கடிகாரம்

May 16 , 2018 2256 days 865 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இடங்களின் (Location) துல்லியமான தரவுகளை அளவிடுவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு செயற்கைக் கோள்களில் பயன்படுத்தப்படும் அணு கடிகாரங்களை உருவாக்கியுள்ளது.
  • தற்போது வரை, இஸ்ரோ தன்னுடைய வழிகாட்டு செயற்கைக் கோள்களுக்கான அணு கடிகாரங்களை ஐரோப்பிய விண்வெளி உற்பத்தியாளரான ஆஸ்ட்ரியம் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்து வந்தது.
  • இந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரமானது, அகமதாபாத்திலுள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தால் (Space Application Centre – SAC) தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த அணு கடிகாரம் தொடர்ச்சியான தகுதிகாண் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
  • பல்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வெவ்வேறு விண்கலங்களின் அணு கடிகாரங்களுக்கிடையேயான நேர வேறுபாடானது, புவியின் மீதுள்ள ஏதாவதொரு பொருள் அல்லது வழிகாட்டு பெறுநர்களின் (Navigation Receiver) துல்லிய நிலைநிறுத்தல்களை அளவிட பயன்படுகிறது.

குறிப்பு :

  • ஒரு வழிகாட்டு ஏவுகணையில் மூன்று அணு கடிகாரங்கள் பொருத்தப்படுகின்றன. இதனுடன் படிக கடிகாரங்களும் (Crystal Clocks) பொருத்தப்படுகின்றன. இந்த படிக கடிகாரங்கள் அணு கடிகாரங்களைப் போல துல்லியமானவை அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்