TNPSC Thervupettagam

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் "சூப்பர் கம்ப்யூட்டர்': மத்திய அரசு முடிவு

July 24 , 2017 2679 days 895 0
  • முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான “சூப்பர் கம்ப்யூட்டரை” (அதிதிறன் கணினி) தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் மூன்று கட்டங்களாக இந்த சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. ரூ.4,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
  • நாடு முழுவதும் அறிவியல் ஆய்வுகளுக்கு சர்வதேச தரத்திலான கணினிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். மூன்று கட்டமாக மொத்தம் 50 சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • முதல் கட்டத்தில் உருவாக்கப்படவுள்ள 6 சூப்பர் கம்ப்யூட்டர்களில் 3 கம்ப்யூட்டர்கள் வெளிநாடுகளில் வாங்கப்படவுள்ளன. அடுத்த 3 கம்ப்யூட்டர்களின் உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
  • இவை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், கான்பூர், காரக்பூர், ஹைதராபாத் ஐஐடிக்கள், புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிலையம், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும். இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
  • இரண்டாவது கட்டத்தில் சூப்பர் கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பாகங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.
  • இப்போது சர்வதேச அளவில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன.
  • இந்தியாவில் 1988ஆம் ஆண்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும் பரம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டன. எனினும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
  • இப்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 25 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவை வானிலை, பருவநிலை மாற்றம், அணு ஆய்வு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்