இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) ஆகியவை இரு நாடுகளுக்கு இடையிலானப் பரிவர்த்தனைகளுக்கு உள்நாட்டுப் பண மதிப்புகளைப் பயன்படுத்தச் செய்வதனை வலுப்படுத்துவதற்கான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
இது உள்நாட்டுப் பண மதிப்புப் பயன்பாட்டு அமைப்பினை (LCSS) உருவாக்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது அனைத்து நடப்புக் கணக்குப் பரிவர்த்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட மூலதன கணக்குப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.