TNPSC Thervupettagam

உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2011 – 2023

December 24 , 2024 3 days 65 0
  • 2011 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்து 40.20 கோடியாக உள்ளது.
  • இம்மதிப்பீட்டின்படி, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி உள்நாட்டில் புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை 40,20,90,396 ஆக உள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (45,57,87,621) கணக்கிடப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 11.78% குறைவு ஆகும்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் சுமார் 37.64% ஆக இருந்த புலம்பெயர்வு விகிதம் ஆனது 28.88% ஆகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • புலம் பெயர்தலுக்கான மூல மையங்களைக் கொண்ட மாவட்டங்கள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற முக்கிய நகர்ப்புற அமைப்புகளில் உள்ளன.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற ஐந்து மாநிலங்கள் ஆனது மொத்த வெளியேற்ற புலம்பெயர்வோரின் எண்ணிக்கையில் 48% பங்கினை கொண்டுள்ளன.
  • இதே போல், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற ஐந்து மாநிலங்கள் மொத்த உள்வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையில் சுமார் 48% பங்கினைக் கொண்டுள்ளன.
  • 1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2.7% ஆக இருந்தது.
  • இது 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 3.7% ஆக அதிகரித்து ள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்