உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2011 – 2023
December 24 , 2024 20 days 99 0
2011 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உள்நாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்து 40.20 கோடியாக உள்ளது.
இம்மதிப்பீட்டின்படி, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி உள்நாட்டில் புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை 40,20,90,396 ஆக உள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (45,57,87,621) கணக்கிடப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 11.78% குறைவு ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் சுமார் 37.64% ஆக இருந்த புலம்பெயர்வு விகிதம் ஆனது 28.88% ஆகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
புலம் பெயர்தலுக்கான மூல மையங்களைக் கொண்ட மாவட்டங்கள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற முக்கிய நகர்ப்புற அமைப்புகளில் உள்ளன.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற ஐந்து மாநிலங்கள் ஆனது மொத்த வெளியேற்ற புலம்பெயர்வோரின் எண்ணிக்கையில் 48% பங்கினை கொண்டுள்ளன.
இதே போல், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற ஐந்து மாநிலங்கள் மொத்த உள்வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையில் சுமார் 48% பங்கினைக் கொண்டுள்ளன.
1991 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2.7% ஆக இருந்தது.
இது 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 3.7% ஆக அதிகரித்து உள்ளது.