உள்நாட்டுப் புலம்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கை 2024
May 21 , 2024 186 days 223 0
2024 ஆம் ஆண்டு உள்நாட்டுப் புலம்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கையினை (GRID-2024) ஜெனீவாவில் அமைந்துள்ள உள்நாட்டுப் புலம்பெயர்வு கண்காணிப்பு மையம் (IDMC) வெளியிட்டுள்ளது.
முந்தைய ஆண்டில் 71.1 மில்லியனாக இருந்த உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையானது 2023 ஆம் ஆண்டில் 75.9 மில்லியனாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டுப் புலம்பெயர்வு என்பது "ஓர் ஆண்டில் தங்கள் நாட்டின் எல்லைகளுக்கு உள்ளேயே மக்கள் கட்டாயமாக புலம் பெயரச் செய்யப்பட்டதைக் குறிக்கிறது”.
2022-2023 ஆம் ஆண்டில், குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மோதல்கள் மற்றும் வன்முறைகள் அதிகப் புலம்பெயர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் 68.3 மில்லியன் மக்கள் மோதல் மற்றும் வன்முறையின் காரணமாக உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ளனர்.
சூடான், சிரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கொலம்பியா மற்றும் ஏமன் ஆகியவை உலகின் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த மக்களில் ஏறக்குறைய பாதிப் பங்கினை கொண்டுள்ளன.
இது 2022 ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட 49 சதவீதம் அதிகமாகும்.
பேரழிவின் காரணமாக உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 7.7 மில்லியனாக இருந்தது; அதில் நான்கில் ஒரு பங்கு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட புலம் பெயர்வு ஆகும்.
வானிலை தொடர்பானப் பேரழிவுகள் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுப் புலம்பெயர்வு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து உள்ளது.
ஒட்டு மொத்தமாக, 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் புலம் பெயர்வுகளில் 56 சதவீதம் பேரழிவுகளாலும், மற்றவை மோதல்களாலும் வன்முறையாலும் ஏற்பட்டவை ஆகும்.