உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் 2023
January 4 , 2024 325 days 270 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த (D-SIBs) வங்கிகளின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது பாரத் ஸ்டேட் வங்கி, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவற்றை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாகத் தக்க வைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவற்றினை D-SIB வங்கிகளாக அறிவித்தது.
D-SIB என்ற கட்டமைப்பின்படி, 2015 ஆம் ஆண்டு முதல் D-SIB வங்கிகளாக நியமிக்கப் பட்ட வங்கிகளின் பெயர்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்த வங்கிகளை அவற்றின் அமைப்பு ரீதியான முக்கியத்துவ மதிப்பெண்களை (SISs) பொறுத்து அதற்குப் பொருத்தமான பிரிவுகளில் வகையிடும்.