மும்பையின் இந்தியப் புவி காந்தவியல் கல்வி நிறுவனமானது அதன் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக காந்தமானியை உருவாக்கியுள்ளது.
புவி காந்த மாதிரிச் சேகரிப்பிற்குத் தேவையான மாதிரி மற்றும் உணர்திறன் சோதனைகளின் செலவைக் குறைப்பதற்கு இது வழி வகுக்கும்.
ஓவர்ஹவுசர் (ஆற்றல் மாற்ற) காந்தமானி என்பது உலகெங்கிலும் உள்ள அனைத்து காந்த ஆய்வகங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் மிகத் துல்லியமான காந்த மானிகளில் ஒன்றாகும்.
அவை அதிக துல்லியம், அதிக உணர்திறன் மற்றும் திறன்மிக்க மின் நுகர்வு ஆகிய காரணங்களால், உலகெங்கிலும் உள்ள அனைத்து காந்த ஆய்வகங்களிலும் மற்றும் சர்வதேச விண்வெளித் திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.