TNPSC Thervupettagam

உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய உலகளாவிய அறிக்கை - 2020

May 4 , 2020 1574 days 729 0
  • இது உள்நாட்டு  இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த மையம் நார்வே அகதிகள் மன்றத்தின் ஒரு பகுதியாகும்.
  • தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் வெப்ப மண்டலப் புயல்கள் மற்றும் பருவமழை காரணமாக பெரும்பாலான பேரழிவு காரணமான  இடப்பெயர்வுகள் தூண்டப் பட்டுள்ளன.
  • வங்கதேசம், சீனா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை தலா நான்கு மில்லியனுக்கும் அதிகமான இடப்பெயர்வுகளை 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் - இதுவரையில் உலகிலேயே இதுவே அதிக எண்ணிக்கையாகும்.
  • 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு முதல் ஏழாவது மிக வெப்பமான ஆண்டாகும்; 2019 ஆம் ஆண்டின் பருவமழை 25 ஆண்டுகளில் இதன் அதிகமான பருவமழையாகும்.
  • 2019 ஆம் ஆண்டில் எட்டு வெப்பமண்டலப் புயல்களும் இந்தியாவைத் தாக்கின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்