ஒரிஸாவிலுள்ள சந்திப்பூரில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மூலம் புதிய தலைமுறை மென்சரிவு குண்டுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளன.
திறம்வாய்ந்த வான்வளிக்கள எதிர்ப்பு ஆயுதம் (SAAW-Smart Anti Airfield Weapon) என்றழைக்கப்படும் இக்குண்டானது, பாலசோர் மாவட்டத்தின் சந்திப்பூர் கடல் பகுதியில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை எல்லையில் (Integrated Test Range) இந்திய விமானப் படையின் போர் விமானத்தால் வீசப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இவை 125-150 கிலோ வரை எடையுடையவை. 80-100 கி.மீ வரையிலான இலக்குகளை தாக்கும் வல்லமையுடையவை. இவை நீண்டதூர இலக்குடைய, வானிலிருந்து நிலம் நோக்கி ஏவப்படக்கூடிய (Air to Surface) துல்லியமான வழிகாட்டு (Precision, Guided) ஆயுதமாகும்.
இந்தியாவின் ஜாகுவார், சுகோய் – 30 MK 1 உள்ளிட்ட அனைத்து முன்னணி வரிசைப் போர் விமானங்களின் மூலம் இந்த குண்டை வீச இயலும்.
இந்த வழிகாட்டப்பட்ட குண்டானது இமாரத் ஆராய்ச்சி மையத்தால், இந்திய விமானப் படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO – Defence Research and Development Organisation) இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.