TNPSC Thervupettagam

உள்நாட்திலேயே உற்பத்தி செய்யப்பட்ட அதிவேக விமான உயிரி எரிபொருளில் இயங்கிய IAFன் விமானம்

February 3 , 2020 1631 days 556 0
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 10% கலவையைக் கொண்ட அதிவேக விமான உயிரி எரிபொருளினால் இயங்கும் AN - 32 விமானத்தை இந்திய விமானப்படையானது வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
  • விமானத்தின் இரு என்ஜின்களும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட அதிவேக விமான உயிரி எரிபொருளால் இயக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விமானமானது லேஹ் நகரத்தில் உள்ள குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
  • இந்த எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பமானது 2013 ஆம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் - இந்தியப் பெட்ரோலிய நிறுவனத்தினால் (Council of Scientific and Industrial Research- Indian Institute of Petroleum / CSIR-IIP) உருவாக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது எரிபொருள் சோதனைக்காக 2018 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையால் ஆதரிக்கப் பட்டது.
  • அதிவேக விமான உயிரி எரிபொருளானது உண்ணுவதற்குத் தகுதியற்ற ‘மரத்தினால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்களிலிருந்து’ உற்பத்தி செய்யப் படுகின்றது.
  • இவை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு, அங்கு இருந்து வாங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்