இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் துகள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட மையமானது (International Advanced Centre for Powder Metallurgy and New Materials - ARCI) உள்ளக எரிப்பு இயந்திரங்களின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதற்காக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது என்ஜின்களில் உராய்வைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் திறனை மேம்படுத்துகின்றது.
இது லேசர் மேற்பரப்பு நுண் கலப்பின் (texturing) மூலம் அடையப் படுகின்றது.
இந்தத் தொழில்நுட்பத்தில், நுண் மேற்பரப்பு கலவையின் அளவு, அடர்த்தி மற்றும் வடிவத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உராய்வு கட்டுப்படுத்தப் படுகின்றது.
இந்தக் கலப்பானது ஒரு துடிப்பு லேசர் கற்றையின் மூலம் உருவாக்கப் படுகின்றது.