முக நூலிற்காக பொருளாதார நுண்ணறிவுப் பிரிவால் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கிய இணைய தளக் குறியீடு 2019 என்ற அறிக்கையில் இந்தியா 47-வது இடத்தைப் பிடித்திருக்கின்றது.
உலகின் 94 சதவிகித மக்கள் தொகையையும் 96 சதவிகித ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த குறியீடு 100 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டது.
இப்பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்திலும் சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா கடந்த வருடம் இருந்த அதே நிலையைக் கொண்டிருக்கின்றது.