TNPSC Thervupettagam

உள்ளடங்கிய சொத்து அறிக்கை 2018

December 7 , 2018 2085 days 603 0
  • உள்ளடங்கிய சொத்து அறிக்கை 2018-ன் ஒரு பகுதியாக உள்ளடங்கிய சொத்துக் குறியீடானது ஐ.நா. சுற்றுச்சூழல் மற்றும் அதன் பங்குதாரர்களால் பாரீஸில் வெளியிடப்பட்டது.
  • உள்ளடங்கிய சொத்து அறிக்கையானது ஐ.நா சுற்றுச்சூழலால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அறிக்கையாகும்.
  • இது நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் மனித நல்வாழ்வுக்குத் தேவையான முக்கிய உள்நோக்குகளை வழங்குகிறது.
  • இந்த அறிக்கையின்படி, உள்ளடங்கிய சொத்துக் குறியீட்டின் அறிக்கையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள 140 நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகள் 1998 ஆம் ஆண்டு முதல் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளன.
    • ஆனால் அவற்றின் தனிநபர் உள்ளடக்க சொத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • கொரியக் குடியரசு, சிங்கப்பூர் மற்றும் மால்டா ஆகிய நாடுகள் மிக அதிக வளர்ச்சியடைந்த நாடுகளாக, இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்