TNPSC Thervupettagam

உள்ளாட்சி ஜனநாயகம் பற்றிய அறிக்கை

October 19 , 2023 276 days 198 0
  • உலக வங்கியானது, “உள்ளாட்சி ஜனநாயகத்தின் கூடுதல் மதிப்பு: இந்தியாவில் மேற் கொள்ளப் பட்ட இயல்பான ஆய்விலிருந்து பெறப்பட்ட ஆதாரம்” என்ற கொள்கை சார் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தனித்துவமான இயல்பு ஆய்வினைப் பயன்படுத்தி உள்ளாட்சி ஜனநாயகத்தின் தாக்கங்களை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்கிறது.
  • உள்ளாட்சி ஜனநாயகம் என்பது குடிமக்களின் விருப்பத் தேர்வுகளுக்கேற்ப அவர்களுக்கு மிகவும் அருகில் அமைந்த அரசு அமைப்புகள் மூலம் சேவை வழங்குவதைக் குறிக்கிறது.
  • ஆனால் இதன் மூலம் பெறப்படும் ஆதாயங்கள் பெரும்பாலும் ஆண்கள், உயர் சாதியினர் மற்றும் பிற மேன்மை இன சமூகக் குழுக்களுக்கே அதிகமாகக் கிடைக்கப் பெறுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்புடையவர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளை அதிக முயற்சியை மேற்கொள்ள வலியுறுத்துவதற்கான பொறுப்புடையவர்கள் ஆவர்.
  • நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் தங்களது சிறப்புத் திறன்களுடன் ஒன்றிணைந்த நிர்வாக அம்சங்களில் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.
  • உள்ளாட்சி ஜனநாயகம் ஆனது சில களங்களில் நிர்வாகத்தை மேம்படுத்துகிறது.
  • ஆனால் இது பொருளாதார விளைவுகளிலோ அல்லது COVID-19 மேலாண்மையின் செயல்திறனிலோ எந்தவொரு ஒட்டுமொத்தத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்