2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பதவிக்காலம் முடிவடைகின்ற 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தாமதமாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுச் செயல்முறையை முடித்த பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்து உள்ளது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதியன்று, மொத்தம் உள்ள 3.31 கோடி வாக்காளர்களில் சுமார் 77% பேர் - சுமார் 2.55 கோடி பேர் உள்ளாட்சித் தேர்தலில் பங்கு பெற்றனர்.
அவர்கள் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்டப் பஞ்சாயத்து (DP) வார்டுகள் (மன்றங்கள்), 5,090 பஞ்சாயத்து ஒன்றியங்கள் (PU) வார்டுகள் மற்றும் 76,746 கிராமப் பஞ்சாயத்து (VP) வார்டுகளுக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
மேலும், இதில் 9,264 கிராமப் பஞ்சாயத்து தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப் பட்டது.
மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது.