தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவை இணைந்து புலிகள் கணக்கெடுப்பு தொகுப்பு அறிக்கையினைச் சமீபத்தில் தயாரித்துள்ளன.
கன்னியாகுமரி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புலிகளே இல்லை என இந்த அறிக்கை கூறுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் காப்பகம் என்பது, தமிழக மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் வளங்காப்பகத்தின் (SMTR) ஒரு பகுதியாகும்.
இங்கு 2020 ஆம் ஆண்டில், ஒளிப்படக் கருவியில் நான்கு புலிகள் பதிவு செய்யப்பட்டன.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், இங்கு ராஜபாளையம் எல்லையில் புலிகள் இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் கிடைத்தன.