உள்வரவு மற்றும் வெளிப்போக்கு அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் 2023
September 17 , 2023 434 days 288 0
இந்திய நிறுவனங்களின் மொத்த வெளிப்போக்கு நேரடி முதலீடுகள் 2023 ஆம் நிதி ஆண்டில் சுமார் 19.46% ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
வெளிப்போக்கு நேரடி முதலீடு (ODI) என்பது ஒரு உள்நாட்டு நிறுவனம் அதன் செயல்பாடுகளை வெளிநாட்டிலும் மேற்கொள்ளும் வகையில் விரிவுபடுத்துகின்ற ஒரு வணிக உத்தி ஆகும்.
இது அந்நியத் தொகுப்பு முதலீட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
இந்திய நிறுவனங்களின் வெளிப்போக்கு நேரடி முதலீட்டின் (ODI) மிகப்பெரியப் பயனாளியாக சிங்கப்பூர் திகழ்ந்தது.
வரிச் சலுகைகளுக்குப் புகழ் பெற்ற பெர்முடா, ஜெர்சி, சைப்ரஸ் ஆகிய நாடுகள் இந்திய வெளிப்போக்கு நேரடி முதலீட்டினைப் பெற்ற முதல் 10 நாடுகளில் இடம் பெற்றுள்ளன.