உழவர்களின் நன்மைக்காக தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் ஓர் முயற்சியாக தமிழக அரசானது உழவன் (Uzhavan) எனும் இரு மொழியிலான (bi-lingual) கைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இச்செயலி வெளியிடப்பட்டுள்ளது. தங்களுடைய பயிர் காப்பீடு (crop insurance) பற்றிய தகவல்கள் உட்பட ஒன்பது வகையான சேவைகளை இச்செயலி மூலம் உழவர்கள் அணுக இயலும்.
இந்த செயலியின் மூலம் உழவர்கள் பின்வரும் சேவைகளை பெறலாம்.
பண்ணை மானியங்கள் மீதான தகவல்கள்.
தங்களுடைய பயிர் காப்பீடு தொடர்பான தகவல்கள்
அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன்னறிவிக்கை.
மேலும் இச்செயலியானது உள்ளூர் அரசு மற்றும் தனியார் வேளாண் அங்காடிகளில் உள்ள விதைகள் மற்றும் உரங்களின் இருப்பு (stocks) பற்றிய தகவல்களையும் உழவர்களுக்கு வழங்கும்.
மேலும் இயற்கை வேளாண்மையின் சிறந்த மேலாண்மைக்காகவும் மண்வளத்தை மேம்படுத்தவும் அதனைப் பேணிப் பராமரிக்கவும் தமிழக அரசானது “அம்மா உயிரி – உரங்கள் திட்டத்தை” (Amma Bio-Fertiliser’ scheme) தொடங்கியுள்ளது.