தமிழ்நாடு, தனது மாநில அரசின் உழவன் செயலியில் நியாயமான விலையில் விவசாய நடவடிக்கைகளுக்கான உபகரணத்தை விவசாயிகள் பெறுவதை இயலச் செய்திடும் வகையில் ஒரு புதிய சேவையைத் தொடங்கிருக்கின்றது.
இந்த வசதி சென்னையைச் சேர்ந்த டிராக்டர் மற்றும் விவசாய உபகரண நிறுவனத்தின் சேவைகள் செயலியை (Tractor and Farm Equipment Limited- TAFE) உழவன் செயலியுடன் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
JFarm சேவைகள் செயலி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் விவசாய இயந்திரமயமாக்கல் தீர்வுகளை அவர்கள் எளிதில் அணுகிடுவதை அதிகப்படுத்திட எண்ணுகின்றது.
இந்த செயலியானது விவசாயிகள் தங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தவும் தங்கள் வருமானத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக்கவும் உதவும் வகையில் உள்ளூர் தட்ப வெப்பநிலை முன்கணிப்பு, விவசாய எச்சரிக்கைச் செய்திகள் மற்றும் ஆலோசனை ஆகியவற்றையும் அளிக்கின்றது.