ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உவர்நீர் இறால் மீன்வளர்ப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் ஆனது மும்பை நகரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் ஆனது, உவர்நில வளங்களின் உற்பத்தித் திறனை மீன்வளர்ப்புக்குப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த 4 மாநிலங்களிலும் சுமார் 58,000 ஹெக்டேர் பரப்பிலான உவர்நிலம் அடையாளம் காணப் பட்டுள்ளது ஆனால் தற்போது சுமார் 2,608 ஹெக்டேர் மட்டுமே இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது.
உவர்நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்பது உவர்நீர் ஊடுருவிய நிலங்களை (மிகப் பெரும்பாலும் வழக்கமான வேளாண்மைக்குப் பொருத்தமற்றது) உள்நாட்டு உவர்நீர் வாழ் உயிரின வளர்ப்பிற்குப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
கடல் சார் உணவு ஏற்றுமதி மதிப்பில் இறால் ஏற்றுமதியானது 65 சதவீதத்திற்கும் மிக அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளதுடன் இந்தியா உலகளவில் வளர்ப்பு இறால் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.