மத்திய இரயில்வேயின் நாக்பூர் பிரிவின் இயந்திரவியல் கிளையானது உஸ்தாட் (USTAAD) எனும் பெயரிடப்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவுடைய ரோபோவை உருவாக்கியுள்ளது.
உஸ்தாட் என்பதன் விரிவாக்கம் - செயற்கை நுண்ணறிவு உதவியுடனான இயந்திரம் மூலமாக அடித்தள கருவிகள் கண்காணிப்பு (USTAAD - Undergear Surveillance through Artificial Intelligence Assisted Droid) என்பதாகும்.
இது உயர் தெளிவுத்திறன் உள்ள புகைப்படக் கருவி மூலம் இரயில் பெட்டிகளின் கருவிகளை சோதனை செய்து நிகழ்நேரத்தில் வைஃபை வழியாக பரிமாற்றம் செய்கிறது.
இது இந்திய ரயில்வேயின் இரயில்களில் உள்ள அடித்தள கருவிகளை ஆய்வு செய்யும்போது உண்டாகும் மனிதப் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவும்.