ஊக்லாவின் உலகளாவிய விரைவு சோதனைக் குறியீட்டில், நிலையான கம்பிவழி அகலக் கற்றை (பிராட்பேண்ட்) வேகத்தின் அடிப்படையில் இந்தியா 67வது இடத்திலும் கைபேசி இணைய (மொபைல் இண்டர்நெட்) வேகத்தில் இந்தியா 109வது இடத்திலும் உள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா நிலையான கம்பிவழி பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில்76வது இடத்தைப் பிடித்திருந்தது.
இந்த அறிக்கை, இந்தியாவின் நிலையான கம்பிவழி பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறது அதாவது, நவம்பர்2017ல்82 Mbps ஆக இருந்த சராசரி வேகம் பிப்ரவரி 2018ல் 20.72 Mbps ஆக அதிகரித்துள்ளது.
சராசரி கைபேசி பிராட்பேண்ட் பதிவிறக்கத்தில் சீனா -26 (96 Mbps) ,ஸ்ரீலங்கா – 82, பாகிஸ்தான் – 92, வங்கதேசம் – 115,நேபாளம் -118 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.
நிலையான கம்பிவழி பிராட்பேண்ட் பதிவிறக்க வேகத்தில் சீனா – 20, ஸ்ரீலங்கா – 76, வங்கதேசம் – 86, நேபாளம் – 89, பாகிஸ்தான் -112 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
பிப்ரவரியில் வெளியிடப்பட்ட உலகளாவிய விரைவு சோதனைக் குறியீட்டின்படி, 62.07 Mbps சராசரி பதிவிறக்க வேகத்தைக் கொண்டு மொபைல் இண்டர்நெட் வசதியில்உலகளவில் நார்வே முதலிடத்தில் உள்ளது.
53 Mbps சராசரி பதிவிறக்க வேகத்தைக் கொண்டு நிலையான கம்பிவழி பிராட்பேண்ட் சேவையில் சிங்கப்பூர் முதலிடத்திலுள்ளது.
ஊக்லாவின் உலகளாவிய விரைவு சோதனைக் குறியீடு7,021 சர்வர்களின் வழியாக உலகம் முழுவதும் இணைய வேகத்தின் தரவுகளை (Internet Speed Data) வேறுபடுத்துகிறது. இந்த 7,021 சர்வர்களில் 439 சர்வர்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.