TNPSC Thervupettagam

ஊசியின்றி நாசி வழி உட்செலுத்தக் கூடிய இந்தியாவின் முதலாவது கோவிட்-19 தடுப்பூசி

September 10 , 2022 811 days 456 0
  • பாரத் பயோடெக் நிறுவனமானது ஊசியின்றி நாசி வழி உட்செலுத்தக் கூடிய இந்தியாவின் முதலாவது கோவிட்-19 தடுப்பூசிக்கான அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • இதற்கு ChAd36-SARS-CoV-S கோவிட்-19 (சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு) இனக் கலப்பு நாசிவழித் தடுப்பூசி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • தற்போதைய நிலவரப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசியின்றி நாசி வழி உட்செலுத்தக் கூடிய தடுப்பூசியினை வழங்குவதற்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவை இயல்பில் நரம்பு வழியே உட்செலுத்தக்கூடிய தடுப்பூசிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்