பருவ நிலை நடவடிக்கை மற்றும் பேரிடரை எதிர்கொள்ளுதல் மீதான ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு கூட்டமைப்பு (ABU - Asia Pacific Broadcasting Union) ஊடக மாநாட்டின் 5-வது பதிப்பானது காத்மாண்டுவில் நடத்தப்பட்டது.
இரண்டு நாள் மாநாட்டின் கருத்துருவானது, “நீடித்த எதிர்காலத்திற்கான ஊடகத் தீர்வுகள்: உயிர்களைப் பாதுகாத்தல், வலிமையான சமூகங்களைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
இந்த மாநாடானது பின்வருவனவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
பருவ நிலை நடவடிக்கை மற்றும் பேரிடரை எதிர் கொள்ளுதலை ஊக்குவிப்பதற்கு ஊடகத்தின் திறனைப் பயன்படுத்துதல்.
ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்முறைத் திட்டங்களுக்காக பங்குதாரர்களை ஊடக உறுப்பினர்களுடன் இணைத்தல்.
ABU ஆனது 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் கோலாலம்பூரில் அமைந்துள்ளது.