TNPSC Thervupettagam

ஊடுபாலினத்தவர் மீதான UNHRC தீர்மானம்

April 13 , 2024 225 days 227 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் ஊடுபாலினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.
  • அரசுமுறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு உரிமைக் குழுக்கள் ஆகியவை மனித உரிமைகளுக்கான முக்கியத் தருணம் என்று வர்ணித்துள்ள இந்தத் தீர்மானம் ஆனது இத்தகைய முதல் வகை முன்னெடுப்பு ஆகும்.
  • இந்தத் தீர்மானத்திற்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன என்பதோடு, மேலும் 23 நாடுகள் வாக்களிக்காமல் விலகின என்ற நிலையில் எந்தவொரு நாடும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை.
  • பின்லாந்து, தென்னாப்பிரிக்கா, சிலி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தத் தீர்மானத்தினை முன் வைத்தன.
  • சுமார் 1.7% குழந்தைகள், ஆண் அல்லது பெண் என்ற இரண்டு பிரிவுகளிலும் பொருந்தாத வகையிலான பல பாலினப் பண்புகளைக் கொண்டதாக வரையறுக்கப் படுகின்ற ஊடுபாலினத்தவராகப் பிறக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்