TNPSC Thervupettagam

ஊடுருவும் அயல் உயிரினங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாடு பற்றிய மதிப்பீட்டு அறிக்கை

September 8 , 2023 448 days 247 0
  • அரசுகளுக்கிடையேயான பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் (IPBES) தளம் ஆனது இந்தப் புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • பல்வேறு மனித நடவடிக்கைகளால் உலகெங்கிலும் உள்ள பகுதிகள் மற்றும் உயிரினங்களுள் அறிமுகப்படுத்தப் பட்ட, தாவரங்கள் மற்றும் விலங்குகள் உட்பட 37,000 அயல் இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இதில் 3,500க்கும் மேற்பட்ட ஊடுருவும் அயல் இனங்கள் அடங்கும் என்ற நிலையில் இந்த ஊடுருவும் அயல் இனங்களானது உலகளவில் பதிவான தாவர மற்றும் விலங்கின அழிவுகளில் 60% பங்கினை வகித்துள்ளன.
  • ஊடுருவும் அயல் இனங்கள் ஆனது உலகளவில் பதிவான பல்லுயிர் இழப்பிற்கான ஐந்து முக்கிய நேரடிக் காரணிகளில் ஒன்றாகும்.
  • அனைத்து வகையான ஊடுருவும் அயல் இனங்களும் பல்லுயிர்ப் பெருக்கம், உள் நாட்டுச் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இனங்கள் மீது எதிர்மறையானத் தாக்கங்களை ஏற்படுத்துவதும் பரப்புவதும் இல்லை.
  • சுமார் 6% அயல் இன தாவரங்கள்; 22% அயல் இன முதுகெலும்பில்லாத உயிரினங்கள்; 14% அயல் இன முதுகெலும்பிகள்; மற்றும் 11% அயல் இன நுண்ணுயிர்கள் ஒரு சூழலமைவில் ஆக்கிரமிப்பு செய்த இனங்களாக அறியப்படுகிற நிலையில், இது இயற்கைக்கும் மக்களுக்கும் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
  • 1,200க்கும் மேற்பட்ட உள்ளூர் இனங்களின் அழிவிற்கு குறைந்தது 218 ஊடுருவும் அயல் இனங்கள் காரணமாக உள்ளன.
  • உயிரியல் சூழலமைவில் ஊடுருவும் அயல் இனங்களின் தாக்கங்கள் ஆனது அமெரிக்காவில் 34 சதவீதமும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 31 சதவீதமும், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் 25 சதவீதமும், ஆப்பிரிக்காவில் சுமார் 7 சதவீதமும் பதிவாகியுள்ளன.
  • நிலத்தின் மீது (சுமார் 75%) அதிகளவில் எதிர்மறையான தாக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் நன்னீர் (14%) மற்றும் கடல்சார் (10%) வாழ்விடங்களில் கணிசமான அளவில் குறைவான தாக்கமே பதிவாகியுள்ளன.
  • பெரும்பாலான நாடுகள் (80%) தங்களது தேசியப் பல்லுயிர்த் திட்டங்களில், ஊடுருவும் அயல் உயிரினங்களை மேலாண்மை செய்வது தொடர்பான இலக்குகளை உள்ளடக்கி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்