ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர கம்போஸ்ட் திட்டம்
April 6 , 2018 2401 days 1243 0
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் மற்றும் நகர கம்போஸ்ட் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களும் 12வது நிதியாண்டைத் தாண்டி 2019-2020 வரை தொடர அனுமதி வழங்கியுள்ளது.
இந்த முன்மொழிவு மத்திய உரத்துறையால் முன்னனுப்பப் பட்டது (Forwarded). இவ்விரு திட்டங்களையும் 2019-2020 வரை தொடர தேவைப்படும் செலவினத் தொகை ரூ. 61,972 கோடியாகும்.
இவ்விருத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவது என்பது விவசாயங்களுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுடைய விலையில் (Statutory Controlled Prices) தேவையான அளவில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு மானியங்களுக்கான 100% தொகையும் நேரடி பயன் மாற்றம் (Direct Benefit Transfer - DBT) முறையில் வழங்கப்படும்.
பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றிற்கான மானியம் மற்றும் நகர கம்போஸ்ட் திட்டத்தின் மீதான சந்தை மேம்பாட்டு உதவி (Market Development Assistance – MDA) ஆகியவை வருடாந்திர அடிப்படையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மானிய விகிதங்களில் வழங்கப்படும்.
பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கான மானியம், 2016-ல் தொடங்கப்பட்ட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
அதே போன்று, சந்தை மேம்பாட்டு உதவிகள் ஆனது 2016-ல் தொடங்கப்பட்ட நகர கம்போஸ்ட் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
நகர கம்போஸ்ட் திட்டத்தின் நோக்கமானது, நகரங்களில் உற்பத்தியாகும் கழிவுகளை கம்போஸ்ட் / உயிரி எரிவாயுவாக மாற்றி உர நிறுவனங்களின் உதவியோடு கம்போஸ்ட்–ஐ சந்தையிடுவதன் மூலம் விவசாயிகளை நன்மையடையச் செய்தலாகும்.