ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் புறக்கணிப்பு – அறிக்கை
March 13 , 2023 625 days 322 0
யுனிசெஃப் அமைப்பானது, ‘ஊட்டச்சத்து குறைபாடு மிக்க மற்றும் புறக்கணிக்கப் பட்டவர்கள்: உலகிலுள்ள இளம் பருவ வயது சிறுமிகள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து நெருக்கடி’ என்ற அறிக்கையை வெளியிட்டது.
இது இளம் பருவ வயது பெண்கள் மற்றும் இனப்பெருக்க வயதுடைய பெண்களின் ஊட்டச்சத்து அளவில் உள்ள தற்போதைய நிலை, போக்குகள் மற்றும் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை ஆராய்கிறது.
12 நாடுகளில் 2020 ஆம் ஆண்டு முதல் 5.5 மில்லியனாக இருந்த கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பருவ வயது பெண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையானது 6.9 மில்லியனாக அல்லது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அந்த 12 நாடுகள்; ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, சாத், எத்தியோப்பியா, கென்யா, மாலி, நைஜர், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான் மற்றும் ஏமன் ஆகியன ஆகும்.
உலகளவில், 2 வயதிற்குட்பட்ட 51 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் அதாவது ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக அவர்கள் வயதிற்கு ஏற்ற உயரத்தினைக் காட்டிலும் குறைவான உயரத்தில் உள்ளனர்.
தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் ஆகியவை இளம் பருவ வயது சிறுமிகள் மற்றும் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படும் பகுதிகளாக விளங்குகின்றன.
இப்பகுதியானது, உலகளவில் குறைந்த எடையால் பாதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு இளம்பருவ சிறுமிகள் மற்றும் பெண்களைக் கொண்ட, மேலும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட ஐந்தில் மூன்று இளம்பருவ சிறுமிகள் மற்றும் பெண்களைக் கொண்ட நாடுகளாகும்.
2021 ஆம் ஆண்டில், 126 மில்லியன் பெண்கள் ஆண்களை விட உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் சுமார் 49 மில்லியன் ஆக இருந்தது.